பொது ஜனவரி 12,2023 | 00:00 IST
புதுச்சேரி லாஸ்பேட்டை குளூனி மேல்நிலை பள்ளி 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த செலவில் சுத்தமான ஆற்றல் என்ற தலைப்பில் மாணவிகளின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. பூமி வெப்பமயமாவதை தடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க சூரிய சக்தி, நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 38,800 சதுரடி பரப்பளவில், 10 நிமடங்களில், 2,431 மாணவிகள், எல்.இ.டி பேனல்களை தாங்கியபடி காற்று, நீர், சூரியசக்தி வடிவில் நின்று சாதனை படைத்தனர்.
வாசகர் கருத்து