மாவட்ட செய்திகள் ஜனவரி 12,2023 | 00:00 IST
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியின் உட்கட்டமைப்பு வசதிகளை துணை வேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் அப்துல்காதிர் வரவேற்றார். கல்லூரி வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப், டைப்ரைட்டிங் பயிற்சி கூடம், பேராசிரியர்கள் அறைகள், செமஸ்டர் தேர்வு எழுதும் அறைகளை துணை வேந்தர் ஆய்வு செய்தார். டிகிரியுடன் கூடிய டைப்ரைட்டிங் பயிற்சி மாணவிகளுக்கு தனித் திறமையை வளர்க்கவும், உடனடி வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரவும் உதவும் என துணை வேந்தர் கருத்து தெரிவித்தார். கல்லூரி வளாகம் தூய்மையாக பராமரிப்பதையும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது குறித்தும் துணை வேந்தர் பாராட்டினார். ஆய்வின் போது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் குருநாதன், பேராசிரியர் முருகேசன், அலுவலக ஊழியர்கள் முத்துமாரி, சுப்பிரமணி உடனிருந்தனர்.
வாசகர் கருத்து