பொது ஜனவரி 12,2023 | 15:47 IST
பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மெட்ரோ ரயில் ஓடும் நேரம் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு பதிலாக, ஒரு மணிநேரம் கூடுதலாக நள்ளிரவு 12 மணிவரை ரயில்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசலை சமாளிக்க மாலை 5 முதல் இரவு 10 மணிவரை ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். வரும் 18ம் தேதி மெட்ரோ ரயில்கள் அதிகாலை 5 மணிக்கு பதிலாக ஒருமணிநேரம் முன்னதாக 4 மணியில் இருந்தே ஓடத் தொடங்கும்.
வாசகர் கருத்து