மாவட்ட செய்திகள் ஜனவரி 12,2023 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், திவ்ய சைதன்ய மெட்ரிக் பள்ளி சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போதைப் பொருள் மற்றும் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் விவேகானந்தர் வேடம் தரித்த மாணவர்களும், மற்றவர்களும் கலந்துகொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாணவிகளின் சிலம்பாட்டம் நடந்தது.
வாசகர் கருத்து