அரசியல் ஜனவரி 13,2023 | 00:48 IST
முதல்வர் ஸ்டாலின் கவர்னரின் செயல்பாடு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது: கவர்னர் ரவி சட்டசபை மரபுகளை மீறி உள்ளார். தமிழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் மோதலை கடைபிடிக்கிறார். மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறார். முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை. தமிழ் மக்களின் பண்பாடு, அரசியல், இலக்கியம் மீது எதிர்மனப்பான்மை கொண்டுள்ளார். பல்லாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மீறாமல் தமிழகம் மற்றும் அதன் மக்களுக்கு ஏற்ப பணியாற்றுமாறு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இந்திய அரசியல் சாசனம் கூறுவது போல் அமைச்சரவை வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி அவர் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து