அரசியல் ஜனவரி 13,2023 | 12:31 IST
மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஜாகிர் ஹுசைன் Jakir Hossain. முன்பு அமைச்சராக இருந்தவர். ரைஸ் மில், பீடி தொழிலை பெரிய அளவில் செய்கிறார். கொல்கத்தா, முர்ஷிதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள ஜாகிரின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் திடீரென வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. 2 நாள் நடந்த சோதனையில் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். முர்ஷிதாபாத்தில் அலுவலகத்தில் கட்டுக்கட்டாத பணம் சிக்கியது. மொத்தம் 10 கோடியை 90 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ரெய்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டணம் தெரிவித்தது. ஜாகிர் மிகப்பெரிய தொழிலதிபர். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க எப்போதும் பணம் வைத்திருப்பார் என்றது. சமீபத்தில் இதே கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தாவிடம் கோடிக்கணக்கான ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து