அரசியல் ஜனவரி 13,2023 | 00:00 IST
சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதா அருண் நாகராஜன். 2011ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தன்னை தாக்கியதாக, 2011 மே 28 ஆம் தேதி போலீசில் புகார் கொடுத்தார், வேதா அருண் நாகராஜன். மனைவி குழந்தைகளை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு திருமாவளவன் தான் காரணம் என புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் திருமாவளவன், வீரப்பனுக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக 11 ஆண்டுகளாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என வேதா அருண் நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தார். புகார் மீதான விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். 3 வாரத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வாசகர் கருத்து