மாவட்ட செய்திகள் ஜனவரி 13,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, வயது 40. ராணுவ ஹவில்தார். ஜம்மு காஷ்மீர் ராணுவ தளத்தில் வேலை பார்த்தார். உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதிகாரிகள், வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணசாமிக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், பிரபாகரன், விஷ்ணு என்ற மகன்களும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
வாசகர் கருத்து