மாவட்ட செய்திகள் ஜனவரி 13,2023 | 18:45 IST
திருப்பூரில் இருபதுக்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகிறார்கள். பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எவரும் தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்கை பதிவு செய்ய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதில்லை. இதனால் ஒன்றரை லட்சம் வாக்குகள் வீணாகின்றன. திருப்பூரில் இருந்தபடியே தங்களின் வாக்கினை பதிவு செய்ய ஏதுவாக இரட்டை வாக்குரிமை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து