அரசியல் ஜனவரி 14,2023 | 00:00 IST
தமிழக கவர்னரை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். கவர்னரை தரம்தாழ்த்தி பேசிய திமுக பேச்சாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. அவரது பேச்சு, கருத்து சுதந்திரமாக கருத முடியாது. தமிழக முதல்வரை பற்றி அதே இழிவான வார்த்தைகள் பேசப்பட்டால் காவல்துறை கருத்து சுதந்திரமாக கருதுமா? பொது மேடைகளை திமுகவினர் தரக்குறைவாக பேச பயன்படுத்தி வருகின்றனர். இனியும் இது தொடராமல் தடுக்க திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திமீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை கண்டும் காணாமல் இருந்தால், அந்த அவதூறு பேச்சுகளை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும். என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து