பொது ஜனவரி 14,2023 | 18:35 IST
திமுக பொதுச்செயலாளரும், நீர்வள அமைச்சருமான துரைமுருகனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அட்மிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 84 வயதாகும் துரைமுருகன், டிசம்பர் 24ம்தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். 2 நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். கடந்த 10ம் தேதி இரவு அவருக்கு மீண்டும் காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டதால் மீண்டும் அட்மிட் ஆனார். 3 நாள் சிகிச்சைக்கு பின் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். இந்நிலையில் 3வது முறையாக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து