மாவட்ட செய்திகள் ஜனவரி 14,2023 | 19:34 IST
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடந்தது. அதன் நிறைவு நிகழ்ச்சியில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்ற பின், தக்கான்குளக் கரையில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம்.செய்தனர்.
வாசகர் கருத்து