மாவட்ட செய்திகள் ஜனவரி 14,2023 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையை சேர்ந்தவர் கனகம், வயது 67. மகள் வேலுமதி, வயது 35. பேரன் மூவரசு வயது 12 ஆகியோர் கடந்த 10ம்தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் மூவரையும் கொடூரமாக தாக்கினர். பேத்தி திருமணத்திற்காக வைத்திருந்த 46 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பினர். கனகம் ஸ்பாட்டிலேயே பலியானார். வேலுமதி ஆஸ்பிட்டலில் இறந்தார். மதுரை மருத்துவமனையில் மூவரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து