பொது ஜனவரி 14,2023 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராம எல்லையில் உள்ள வெள்ளந்தாங்கி வீரனாரை காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத வழிபாடு 16 தலைமுறையாக தொடருகிறது. ஊரில் உள்ள எல்லா ஆண்களும் புது பானையில் பொங்கல் வைத்து, வீரனாருக்கு படையலிட்டனர். இதனால் சந்ததிகள் வளரும், விவசாயம் செழிக்கும் என்பது நைநார்பாளையம் கிராமத்தினரின் நம்பிக்கை.
வாசகர் கருத்து