மாவட்ட செய்திகள் ஜனவரி 14,2023 | 00:00 IST
மலேசியாவில் 2011ல் நடந்த கணக்கெடுப்பின்படி 18 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். அதில் பெரும்பாலானோர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரை சேர்ந்தவர்கள். மருத்துவம், மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம், திருச்செந்துார், பழநி கோயில்களில் தரிசனம் செய்ய, பொருட்கள் வாங்க மற்றும் உறவினர்களை பார்க்க மலேசியாவில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மதுரைக்கு வருகின்றனர். தேபோல் மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மலேசியா செல்கின்றனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை கிடையாது. திருச்சி வந்து தான் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் தேவையில்லாத நேர விரையம், பண விரையம், அலைச்சல் ஏற்படுகிறது. மலேசியா டு திருச்சிக்கு தினமும் 5 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஒரு விமானத்தில் 180 பயணிகள் பயணிக்கலாம். அதில் 2 விமானங்களையாவது மலேசியா டு மதுரைக்கு நேரடியாக இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து