மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 11:25 IST
அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்தவர் சேகுவாரா. ஆயுத புரட்சிகளுக்கு தலைமை தாங்கி, கியூபா உள்ளிட்ட நாடுகளின் விடுதலைக்குப் போராடியவர். இவருடைய மகள் டாக்டர் அலெய்டா சேகுவார முதல் முறையாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவரை சி.பி.எம். கட்சி நிர்வாகிகள் பலகிருஷ்ணன், பேபி, ராமகிருஷ்ணன், ரங்கராஜன், மதிமுக நிர்வாகி மல்லை சத்யா உள்பட பலர் வரவேற்றனர். 3 நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் சேகுவாரா மகள் அலெய்டாவுக்கு சி.பி.எம். கட்சி சார்பில் பாராட்டு விழாவும் நடக்கிறது. இதில் திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து