மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர். அங்குள்ள, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக இ.பி.எஸ். அணி நிர்வாகி திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஒ.பி.எஸ். அணி அதிமுக சார்பில் அதன் நிர்வாகிகள் அறிவுடை நம்பி, சாமி நாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 73-வயதான வயதான அதிமுக தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை போட போராடினார். பின்னர் அவருக்கு ஒருவர் உதவி செய்து, மாலையை எம்.ஜி.ஆர். சிலையின் கழுத்தில் மாட்டி மகிழ்ந்தார்.
வாசகர் கருத்து