மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
பேட்டரி டூ வீலர்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த, கண்டெய்னர் லாரி விபத்துக்கு உள்ளானது. தாம்பரம்- மதுரவாயில் பைபாஸ் சாலையில் கோவூர் அருகே, லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. வண்டி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில், டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர். ஆனால், வண்டியில் இருந்த 25 பேட்டரி டூ வீலர்கள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீஸார், வண்டியை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர்.
வாசகர் கருத்து