மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 18:58 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி கிராமத்தில் ஜக்கம்மாள் கோயில் உள்ளது. மாட்டுப்பொங்கலையொட்டி ஆண்களும், சிறுமிகளும் கலந்து கொள்ளும் ஜக்கம்மாள் திருவிழா விமரிசையாக நடந்தது. ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு ஜக்கம்மா சிலை மற்றும் மரத்திற்கு வெள்ளைத்துணி, மாலை அணிவித்து அலங்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஜக்கம்மாள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஜக்கம்மாவை வழிபட்டால் நினைத்து காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து