மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 14:48 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி, வயது 60. மனைவி கஸ்தூரி, வயது 54. மானாமதுரை அருகே தீயனூரில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க மனைவியுடன் ராஜாமணி டூவீலரில் சென்றார். தீயனூர் விலக்கு அருகே பின்னால் வேகமாக வந்த கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலியானார்கள். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து