மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 15:57 IST
புதுச்சேரி சொக்கநாதன் பேட்டை பகுதியில் உள்ளது TGS நகர். நேற்று நள்ளிரவு மர்ம நபர், அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த 5 கார்களின் கண்ணாடிகளை இரும்புக் கம்பியால் உடைத்தார். அங்கு வசிப்பவர்கள் அவரைப் பிடித்து விசாரித்தபோது, குடி போதையில் இருந்தார். அவர்களிடம் தகராறு செய்துவிட்டு ஓடியதை அடுத்து, போலீசுக்கு புகார் சென்றது. போலீசார் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வாசகர் கருத்து