மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 00:00 IST
உடுமலை அருகே சோமவார பட்டியில், ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. பொங்கலையொட்டி கோயில் திருவிழா அதிகாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் தொடங்கியது. சுற்றியுள்ள பகுதிகளில் தெய்வமாக கருதி வழிபடும் சலகெருதுகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலிலே சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து