மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 12:09 IST
பொங்கலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி, கீழ்புதூர், தேவசமுத்திரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் சேர்ந்து ராயக்கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் விழாவை நடத்தினர். 5 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக அழைத்து வரப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை பிடித்து இளைஞர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். ஜல்லிக்கட்டை போல் அல்லாமல் காளைகளை சீண்டி விளையாடிய இந்த எருதாட்டம் விழாவை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து