மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ளது தாயப்பன் வட்டம். இந்த ஊரில் சாலை போடுவதற்கு அரசு முயற்சிஎடுத்தது. அரசு தேர்வுசெய்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று, தனியார் சிலர் கூறினர். சாலை போடுவதற்கான முயற்சிகளையும் தடுத்தனர். இதனால் தாயப்பன் வட்டம் பகுதி மக்கள், அந்த இடத்தை கையகப்படுத்தி, சாலை போட்டுத் தர வேண்டும் என கூறினர். காலம் காலமாக அந்த பாதையை பயன்படுத்தி வருவதாக கூறி, திருப்பத்தூர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து