மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 15:31 IST
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும் கோடை சீசன் மற்றும், பழ கண்காட்சியையொட்டி 2 லட்சத்து 85 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தோட்டக்கலை திட்டமிட்டது. ஊட்டி தோட்டக்கலை துணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் நாற்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தனர். ஆன்ட்ரினம், சால்வியா, பால்சம், பெகோனியா, மேரிகோல்டு உள்ளிட்ட 30 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து