அரசியல் ஜனவரி 19,2023 | 00:00 IST
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் திமுக அரசு தவறான புள்ளி விபரங்களை தருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுவதில்லை. ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பெட்டம் வழங்கியதாக திமுக அரசு அறிவித்தது. மருந்துக்காக எவ்வளவு செலவிடப்பட்டது; என்னென்ன மருந்துகள் வழங்கப்பட்டன; ஒரு கோடி பயனாளிகளின் விபரங்கள் உள்ளதா? என்று விசாரித்தால், எந்த புள்ளி விபரங்களும் இல்லை என்று செய்திகள் வருகின்றன. அந்த விபரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதற்கு, சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் பதில் அளித்தார். புள்ளி விபரங்கள் டிபிஐ அலுவலகத்தில் தயாராக உள்ளன. பழனிசாமி வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
வாசகர் கருத்து