மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 16:52 IST
புதுச்சேரி கடற்கரை சாலையில், பிரான்ஸ் நாட்டின் துணை தூதரக அலுவலகம் உள்ளது. வெளி நாட்டு அலுவலகம் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் உண்டு. இந்த நிலையில், ட்ரோன் கேமரா ஒன்று, இந்த அலுவலகம் மேலே பறந்தது. அருகில் இருந்த புதுச்சேரி தலைமை செயலகம் மீதும் பறந்து படம் பிடித்தது. போலீசார் அங்கு வந்த போது, ட்ரோன் கேமராவும், அங்கே இருந்த மர்ம நபர் ஒருவரும் மாயமானார்கள். அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். புதுச்சேரி சுற்றுலா தளம் என்பதால், யூ ட்யூப்பர்கள், வேலையாக கூட இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து