மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 00:00 IST
சென்னை யோகேஷ் சைக்கிளிங் குழுவைச் சேர்ந்த 60 பேர், தஞ்சாவூரில் இருந்து தங்களின் 11வது ஆண்டு, சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். சோழர் வரலாற்று சிறப்புகளை அறிந்து அதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், இந்த விழிப்புணர்வு பயணத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். 3 நாள் சைக்கிள் பயணத்தின் முதல் நாள், தஞ்சாவூரில் இருந்து வீராணம் ஏரி பகுதிக்கு சென்றனர். பொன்னியின் செல்வன் ட்ரையல் என்ற தலைப்பில் இந்த பயணத்தை மேற்கொண்டு இருப்பதாகவும், மூன்று நாளில் முந்நூறு கிலோ மீட்டர் பயணம் போக இருப்ப்தாகவும் அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து