பொது ஜனவரி 20,2023 | 14:35 IST
நீலகிரி சுற்றுசூழலை பாதுகாக்க 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க அரசு தடை போட்டது. சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா, தாவரவியல், ரோஜா, சிம்ஸ், காட்டேரி பூங்கா உட்பட 70 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைத்தனர். 1, 2, 5 ரூபாய் காயின் போட்டு குடிநீர் பிடிக்கலாம். இப்போது புதிய காயின் போட்டால் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை. சில ஏடிஎம்களில் எந்த காயின் போட்டாலும் காற்று தான் வருது என சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். இவற்றை உடனே சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து