பொது ஜனவரி 20,2023 | 00:00 IST
ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. அதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 48ல் இருந்து 50 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 50ல் இருந்து 52 ரூபாயாகவும் உயர்ந்தது. நிலைபடுத்தப்பட்ட பால் 62ல் இருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் 70ல் இருந்து 72 ரூபாயாகவும், தயிர் 72ல் இருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை வெள்ளியன்று அமலுக்கு வந்தது. 70 நாட்களுக்கு ஒரு முறை தனியார் நிறுவனங்கள் விலையை கூட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து