மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 00:00 IST
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூரிலுள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மெஷினில் 79 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது குறித்த புகாரில் இருவரை கைது செய்த கேரள போலீசார் கள்ள நோட்டு கும்பலின் தலைவனை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக போலீசாரின் உதவியுடன் உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுகா, கொழுமம் மீனவர் தெருவில் தங்கியிருந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபுவை கைது செய்து கேரளா அழைத்து சென்றனர். அவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர், கட்டர், பேப்பர்கள் மற்றும், 356 ஐநூறு ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து