பொது ஜனவரி 20,2023 | 00:00 IST
800 ஆண்டு சிவலிங்கத்தை தோண்டி எடுத்த சிவனடியார்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கனகவுண்டன்புதூரில், முனுசாமி என்பவரது விவசாய நிலத்தில் சிவலிங்கம் மண்ணில் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்தது. அதை சுற்றுவட்டார மக்கள் வழிபட்டு வந்தனர். இதனை அறிந்த சிவனடியார்கள் சிவலிங்கத்தை வெளியே எடுக்க முடிவு செய்தனர். சிவலிங்கத்தை தோண்டி எடுத்தனர். அதனுடன் 3 நந்தி சிலைகளும், 2 புலிகுத்தி நடு கற்களும் கிடைத்தன. அதற்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர். புலியுடன் சண்டையிட்டு இறந்த வீரர்கள் நினைவாக புலிகுத்தி கற்கள் நடப்படுவது பழங்கால மரபு. நடுகல்லில் வீரர் ஈட்டியால் புலியை குத்துவது போலவும், வீரரின் மனைவியும், நாய்களும் அருகில் நிற்பதுபோலவும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிலைகள் 800 ஆண்டு பழமையானதாக இருக்கலாம்; இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சிவனடியார்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து