மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள திருவள்ளுவர் ஞானதீப கல்வி கழகம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மல்லப்புரம் திருவள்ளுர் மெட்ரிக் பள்ளி, எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விவேகாந்தா பள்ளி, விஷ்வ வித்யாலயா, அத்திப்பட்டி ராமையா நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பாக மதநல்லிணக்க ஊர்வலம் எழுமலை புள்ளுக்கடை மைதானத்தில் துவங்கியது. ஊர்வலத்தை மும்மதத்தைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் ஜெயராமன், சலீம்பாய், பாதிரியார் செபஸ்டின் ஆகியோர் துவக்கி வைத்தனர். மத நல்லிணக்க விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராமகிருஷ்ணா சேவை மையத்தில் நிறைவடைந்தது.
வாசகர் கருத்து