மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 18:51 IST
கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. விபத்தை தடுக்க போலீசார் டிவைடர்கள் வைத்துள்ளனர். திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ், டிவைடர் இருந்த பகுதியை கடந்தபோது, முன்னே சென்ற பைக் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் முயற்சித்தார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் டிவைடரில் மோதி விபத்தானது. பயணி ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் மற்றவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து