பொது ஜனவரி 20,2023 | 00:00 IST
பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக குடிநீரை கொண்டு செல்வதற்காக பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாமன்னவாட்டர் ஹவுஸ் பகுதியில் அதிக தண்ணீர் எடுக்கும் வகையில் கற்களை போட்டு பவானி ஆற்றை திசை திருப்பி உள்ளனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணிகளை கைவிட கோரி மேட்டுப்பாளையம் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கு வந்த நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் போலீசார் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கற்கள் அப்புறப்படுத்தப்பட்டது. கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
வாசகர் கருத்து