மாவட்ட செய்திகள் ஜனவரி 21,2023 | 13:28 IST
சாலை விபத்தில், தாத்தா கால் முறிந்ததைப் பார்த்த பேரன், அந்த சாலைக்கு போய், தாத்தா விழ வைத்த பள்ளத்தை கல், மண் போட்டு மூடினான். 60 வயதான தாத்தா பெயர் சேகர். 13 வயதான பேரன் மாசிலாமணி. எட்டாம் வகுப்பு படிக்கிறான் புதுச்சேரி, வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில், டூ வீலரில் போன சேகர், பின்னால் வந்த பைக் மோதி, பள்ளத்தில் சிக்கி கால் முறிவுக்கு உள்ளானார். முக்கியமான சாலையில் இருந்த அந்த பள்ளத்தை, அரசு சரி செய்யாவிட்டாலும், தனி ஒருவனாய் சிறுவன் மாசிலாமணி, அங்கு சென்று, கல் மண் போட்டு, பள்ளத்தை மூடினான். அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பனை போல், அரசுக்கு பாடம் நடத்தி இருக்கிறான் இந்த சிறுவன். அவனுடைய செயலை அனைவரும் பாராட்டினர்.
வாசகர் கருத்து