மாவட்ட செய்திகள் ஜனவரி 21,2023 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ G.V.G. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி செயலர் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தார். இயக்குனர் மஞ்சுளா, முதல்வர் ராஜேஸ்வரி, வணிகவியல் துறைத் தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் முனைவர் சீனிவாசன் பங்கேற்று இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே மாணவிகள் செல்போனை பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து