அரசியல் ஜனவரி 22,2023 | 12:00 IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஏப்ரலில் தமிழக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் சென்னையில் தங்கி முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலை , பார்லிமென்ட் தேர்தலில் திமுகவிடம் இருந்து எத்தனை தொகுதிகளை பெறுவது என பல விஷயங்களை ராகுல் பேசுவாராம். பாமக தலைவர் அன்புமணி , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என பலரையும் சந்திக்கிறார். பாமகவும் , மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணிக்குள் வர வேண்டும் என ராகுல் விரும்புகிறாராம். தற்போது வாக்காளர்கள் மனநிலை திமுகவுக்கு எதிராக மாறி உள்ளது. எனவே கூட்டணியை பலப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், இவர்களை சேர்த்தால் தமிழகத்தில் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் ராகுல்.
வாசகர் கருத்து