பொது ஜனவரி 22,2023 | 13:13 IST
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படம் இயக்கினார். வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக மணிரத்னம் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மணிரத்னம் தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளார். போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை அவமதிக்கும் வகையில் கதையை மாற்றி உள்ளார். மணிரத்னம் மீது அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து