மாவட்ட செய்திகள் ஜனவரி 22,2023 | 13:35 IST
கோவை தீத்திபாளையம் சி.எம்.சி. பள்ளி மைதானத்தில் பைட்டர்ஸ் அகாடமி சார்பாக பாதுகாப்பு தற்காப்பு கலைகளை 1,200 மாணவர்கள் இணைந்து 1 மணி நேரத்தில் நிகழ்த்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, ஸ்கேட்டிங், அம்பு எய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகளை 1,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 மணி நேரத்தில் நிகழ்த்தி உலக சாதனை புரிந்தனர். இந்த உலக சாதனையை நோபல் வோல்டு ரெக்காட் நிறுவனம் அங்கீகரித்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியது.
வாசகர் கருத்து