மாவட்ட செய்திகள் ஜனவரி 23,2023 | 13:51 IST
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து, அரசு டவுன் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி வந்தது. வேப்பூர் - விருத்தாசலம் சாலை, கோமங்கலம் கிராமம் அருகே பஸ் வந்தபோது, முன்னால் சென்ற நெல் அறுவடை இயந்திரத்தை முந்தி செல்ல அரசு பஸ் டிரைவர் முயன்றார். எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனம் மீது அரசு பஸ் மோதியது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரபாசன வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கூலி தொழிலாளி பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என 50 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விருத்தாசலம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து