மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடம் பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது, இந்த பீரங்கி மேட்டின் சிதைந்து போன மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன்காட்சியளிக்கிறது. தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் காலத்தில் இருந்த இந்த பீரங்கி கடும் வெயில் மழையிலும் துருப்பிடிக்காமல் இன்றும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது, இந்த பீரங்கிக்கு ராஜகோபால பீரங்கி என்ற பெயரும் உண்டு. இந்த ராஜகோபால பீரங்கி பழமையினாலும் செய்யப்பட்ட விதத்தினாலும் முதல் இடத்தில் இருக்க வேண்டிய பீரங்கி என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
வாசகர் கருத்து