மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 14:45 IST
சென்னை, அயனவாக்கம் தனியார் பள்ளியின் ஊழியர் சசிகுமார் என்கிற எட்வின். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். தற்செயலாக பார்த்த பள்ளி முதல்வர் இருவரையும் விசாரித்தார். சசிகுமாரின் செல்போனில், அந்த மாணவியின் ஆபாச படங்கள் இருந்தன. போரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி முதல்வர் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து