மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் பட்டாவில் பெயர் மாற்ற விஏஓ முனியப்பனிடம் சென்றார். முனியப்பன் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். தமிழரசன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை விஏஓ முனியப்பனிடம் கொடுத்தார். முனியப்பன் வாங்கிய போது அவரை பிடித்த போலீசார் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து