மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் புளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கோவையில் நடக்கிறது. லீக் சுற்றில் நாராயணகுரு கல்லுாரி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் ஏ.பி.கே.எம்.எப்.சி., அணியை வீழ்த்தியது. நாராயணகுரு அணிக்காக லிங்கேஷ் மற்றும் புகழேந்தி தலா ஒரு கோல் அடித்தனர். காருண்யா கல்லுாரி மற்றும் நேரு கல்லுாரி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டத்தில் காருண்யா கல்லுாரி அணியின் செல்வ விக்னேஷ் இரண்டு கோல்கள் அடிக்க, அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து