மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் ஆங்காங்கே குவியல் குவியலாக குவித்து வைத்து வருகின்றனர். 400 டன் எடையில் குவிக்கப்பட்டுள்ள நெல் 15 நாட்களாக வெயில், மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து