மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 13:38 IST
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர். 5ம் வகுப்பு மாணவி வர்ஷினி பாடிய விழிப்புணர்வு பாடல் அனைவரையும் கவர்ந்தது. திருவாரூர் அருகே உள்ள காட்டூர் அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர். வாக்களிப்பதன் அவசியம் மற்றும் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து