மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 13:55 IST
கோவையை தலைமை இடமாகக் கொண்டு 2003-ல் துவங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்பு சிறுதுளி. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்தவது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது. இவர்களின் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக ஆளுநரின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான விருது சிறுதுளி அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் வமைப்பின் நிர்வாக அறங்காவலராக வனிதா மோகன் இருந்து வருகிறார்.
வாசகர் கருத்து