மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 14:05 IST
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் தைத் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி சந்திரசேகரர் உடனுறை ஆனந்தவல்லி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். ரிஷப கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிப்ரவரி 3ல் ராமர் தீர்த்தக் குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
வாசகர் கருத்து