மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 15:17 IST
வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு பகுதிகளில் வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பிரசாரம் மீனவவர்களிடம் சரிவர சென்றடைவதில்லை. எனவே மீன்வளத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மீனவர்களுக்காக விசைப்படகில் சென்ற அதிகாரிகள், மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். அங்கு மீன்களை ஏலம் எடுத்த மீனவ பெண்கள் மற்றும் மீனவர்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். காரைக்காலில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் முகமது மன்சூர் பரிசு வழங்கினார்.
வாசகர் கருத்து